தாய் வனிதாவுடன் இருப்பதாக மகள் வாக்குமூலம் - காவல்துறை தகவல் 

தாய் வனிதாவுடன் இருப்பதாக மகள் வாக்குமூலம் - காவல்துறை தகவல் 

தாய் வனிதாவுடன் இருப்பதாக மகள் வாக்குமூலம் - காவல்துறை தகவல் 
Published on

தாய் வனிதாவுடனே இருப்பதாக மகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவருக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே விவாகரத்தானது. அவர்களது மகள் ஜோவிதா, தந்தையான ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்தார். 

கடந்த பிப்ரவரி மாதம் வனிதா தனது மகள் ஜோவிதாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் ஆனந்தராஜ் கொடுத்த குழந்தை கடத்தல் புகாரில், இன்று சென்னையிலுள்ள பிக்பாஸ் வீட்டில் வனிதாவை விசாரிப்பதற்கு தெலங்கானா போலீஸ் சென்றது. இந்த விசாரணைக்கு தெலங்கானா போலீசார் சென்னை நசரத்பேட்டை போலீசாரின் உதவியுடன் விசாரணைக்கு சென்றனர். இந்த விசாரணை இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது.

மகள் தாயுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? அல்லது தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? என்பதை பொறுத்தே வனிதாவின் கைது குறித்து முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தாய் வனிதாவுடனே இருப்பதாக மகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. வனிதாவின் கணவர் ஆனந்தராஜன் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்று விட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com