\
கொடைக்கானல்: தீயில் கருகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

கொடைக்கானல்: தீயில் கருகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

கொடைக்கானல்: தீயில் கருகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
Published on

கொடைக்கானல் அருகே வீடு ஒன்றில், பெண்ணின் உடலை தீயில் கருகிய நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெரினா பேகம். இவரது வீட்டில் நேற்று தீப்பற்றி எரிந்து உள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

அந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, வீட்டினுள் சென்று பார்த்தபோது, ஜெரினா பேகம் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com