\
ஹெச்.ராஜா உள்ளிட்ட 311 பேர் மீது வழக்குப்பதிவு!

ஹெச்.ராஜா உள்ளிட்ட 311 பேர் மீது வழக்குப்பதிவு!

ஹெச்.ராஜா உள்ளிட்ட 311 பேர் மீது வழக்குப்பதிவு!
Published on

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா உள்ளிட்ட 311பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யக்கோரி மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே பாஜக சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 311 பேர் மீது மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 143- சட்ட விரோதமாக கூடுதல், 145- கலைந்து செல்லும்படி உத்தரவிட்டும் சட்டவிரோதமாக கூடுதல், 341-அத்துமீறி நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட வழக்குப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com