\
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இயக்குநர் கவுதமனுக்கு அனுமதி மறுப்பு

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இயக்குநர் கவுதமனுக்கு அனுமதி மறுப்பு

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இயக்குநர் கவுதமனுக்கு அனுமதி மறுப்பு
Published on

இயக்குநர் கவுதமன் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க அவருக்கு தடையில்லா சான்று வழங்க முடியாது என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

வரும், 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல காவல்துறையினர் தடையில்லா சான்று வழங்காததால் அனுமதி வழங்கக் கோரி இயக்குனர் கவுதமன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையின் போது, ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையிலுள்ளதால் தடையில்லா சான்று வழங்க முடியாது என காவல்துறையினர் தரப்பில் விளக்கப்பட்டது.

அப்போது, தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில்தான் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கவுதமன் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரமேஷ், அதேபோல கச்சத்தீவில் எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என காவல்துறை நினைத்திருக்கலாம் என தெரிவித்து, வழக்கை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com