தமிழ்நாடு
தமிழகத்தில் 75,000 காவலர்கள் மீட்பு பணிக்கு தயார் - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
தமிழகத்தில் 75,000 காவலர்கள் மீட்பு பணிக்கு தயார் - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் காவலர்கள் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 250 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப் படையினர், மீட்பு படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் சுவர் துளைக்கும் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களில் 3 குழுவினர் சென்னை மாநகர காவல்துறையிலும், தஞ்சாவூர், கடலூரில் தலா ஒரு குழுவினர் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
350 கடலோர காவல் படை வீரர்கள் சிறு படகுகளுடன் தயார் நிலையில் இருப்பதாகவும், தேசிய நீச்சல் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

