ஆளுநர் செல்லும்முன் திருவாரூர் கோயிலில் ஏற்பட்ட அசாதாரண சூழல்! சீர்செய்த காவல்துறை

ஆளுநர் செல்லும்முன் திருவாரூர் கோயிலில் ஏற்பட்ட அசாதாரண சூழல்! சீர்செய்த காவல்துறை
ஆளுநர் செல்லும்முன் திருவாரூர் கோயிலில் ஏற்பட்ட அசாதாரண சூழல்! சீர்செய்த காவல்துறை

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆளுநர் செல்லும்முன் நடக்கவிருந்த அசாதாரண சூழலை மாவட்ட காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

தியாகராஜர் கோயிலில் பூரண கும்ப மரியாதையுடன் ஆளுநர் ரவியை வரவேற்க இருந்த கிழக்குவாசலில், அவர் வருவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாக கிழக்கு வாசலில் கட்டி இருந்த பெரிய தேன்கூட்டை புறாக்கள் கலைத்து விட்டுவிட்டது. இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இருப்பினும் சூழல் உணர்ந்து, அங்கிருந்த திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் சாமர்த்தியமாக செயல்பட்டு, வேறு வாசல் வழியாக ஆளுநரை அழைத்து சென்று அங்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து சிறப்பாக அவரை சாமி தரிசனம் செய்ய வைத்துள்ளனர். தொடர்ந்து ஆளுநர் அங்கு சாமி தரசனம் செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ரவி இன்று சென்றிருந்தார். அங்கு நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடைபெற்ற `தேசிய கல்விக் கொள்கையை எவ்வாறு நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்’ என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை ஆளுநர் கூறினார். பகலில் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அதன் பிறகு மாலை திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு புறப்பட்டார்.

கோயிலுக்கு சென்ற அவருக்கு, ஆலய நிர்வாகம் பூரண கும்ப மரியாதை வழங்குவதற்காக கிழக்கு கோபுரத்தில் காத்திருந்தது. அந்த இடத்தில் ஆளுநர் பாதுகாப்பு வாகனங்களும் முன்கூட்டியே சென்று காத்திருந்தன. ஆளுநர் கோயிலுக்கு செல்வதற்கு சரியாக பத்து நிமிடங்களுக்கு முன்னர், கிழக்கு கோபுரத்தின் மேலே கட்டி இருந்த பெரிய தேன்கூட்டை புறாக்கள் கலைத்து விட்டன. இதனால் அங்கிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல தொடங்கினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் உடனிருந்த அதிகாரிகள் இணைந்து சாமர்த்தியமாக செயலாற்ற தொடங்கினார். அவர்கள் `ஆளுநர் பாதுகாப்பு விசயத்தில் எந்தவித சமரசமும் செய்ய கூடாது’ என ஆலய நிர்வாகத்திடம் பேசி ஆளுநர் பாதுகாப்பு அணியினரை வேறு பாதை வழியாக நிற்க ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து  வேறு பாதையில் ஆளுநர் ரவியை அழைத்துச்சென்று, அங்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு மேற்கு வாசல் வாயிலாக ஆளுநரை வழி அனுப்பி வைத்தார்கள் மாவட்ட காவல்துறையினர். இதைத்தொடர்ந்து அவர்களின் துரித செயல், பெரும் பாராட்டுக்கு உட்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com