\
இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: போலீஸ் குவிப்பு

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: போலீஸ் குவிப்பு

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: போலீஸ் குவிப்பு
Published on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
பரமக்குடியில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 11 -ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இந் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள். இதனையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளில்லா விமானம் மூலம் கணகாணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். காலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com