\
நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு

நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு

நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு
Published on

சட்டமன்றத் தேர்தலையொட்டி, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போர் அதனைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் 2,700க்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர். அதில் 500 துப்பாக்கிகள் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்தை அணுகி, தேர்தல் தேதிக்கு முன்பாக அவற்றை ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை 600க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகங்களில் செயல்பட்டுவரும் தேர்தல் பிரிவு, சட்டமன்றத் தேர்தலையொட்டி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com