\
மதுரையில் மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை   

மதுரையில் மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை  

மதுரையில் மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை  
Published on: 

மதுரை மாநகர மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மதுரை மாநகர காவல் துறையில் மோப்பநாய் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் விஜயகுமார்(45). இவர் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மோப்பநாய் பிரிவு அலுவலகத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 விஜயகுமாரின் உடலை கைப்பற்றிய தல்லாகுளம் காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com