இளைஞர் உயிரை காப்பாற்றிய காவலர்.. குவியும் பாராட்டுக்கள்
சென்னை எழும்பூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது.
ரயிலில் படியில் நின்று பயணம் செய்வது ஆபத்து என்று எச்சரித்து வந்தாலும் அதை சிலர் மீறுவதால் ஏற்படும் விபத்துக்கள் அதிகம். நாலுக்கு நாள் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் படியில் நின்று பயணம் செய்த இளைஞர் ஒருவர் திடீரென கால் இடறி கீழே விழுந்தார். ஆனால், கம்பியை பிடித்தவாறு ரயிலில் தொங்கினார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சண்முகம், உடனடியாக விரைந்து செயல்பட்டு அந்த இளைஞரை ரயிலில் இருந்து கீழே இழுத்து உயிரை காப்பாற்றினார். ரயிலில் இருந்து தவறி விழுந்தவரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு தெரிவித்து ரயில்வே பாதுகாப்பு துறை ஐ.ஜி 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கினார்.