\
கணவரில்லை; கைவிட்ட பிள்ளைகள் - கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்; காப்பாற்றிய காவலர்

கணவரில்லை; கைவிட்ட பிள்ளைகள் - கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்; காப்பாற்றிய காவலர்

கணவரில்லை; கைவிட்ட பிள்ளைகள் - கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்; காப்பாற்றிய காவலர்
Published on
சென்னை பெசன்ட் நகர் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, ரோந்துப் பணியிலிருந்த காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
எலியட்ஸ் கடற்கரையில் ரோந்துப் பணியிலிருந்த ராஜா என்ற காவலர், ஒரு பெண் கடலில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதைப் பார்த்துள்ளார். உடனடியாக செயலில் இறங்கிய ராஜா, அந்தப் பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
விசாரணையில், புரசைவாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற அவர், கணவர் இறந்த நிலையில் பிள்ளைகள் கைவிட்டுவிட்டதால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. கணவர் இறந்த தினத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டதாகவும் மகேஸ்வரி கூறியுள்ளார். இதையடுத்து அவரது மகனை வரவழைத்து காவல்துறையினர் விசாரித்தனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com