விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
2 கூடுதல் ஆணையர்கள் முன்னிலையில் பல்வேறு இந்து அமைப்புகளுடன் சுமார் அரைமணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு உத்தரவை மீறி சிலை வைப்பு, ஊர்வலங்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக இந்து முன்னணியின் நிலைப்பாடே பாஜவின் நிலைப்பாடு என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். மேலும், இந்து முன்னணித தன் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.