‘ரூட் தல’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி - கல்லூரி முதல்வர்களுடன் காவல்துறை ஆலோசனை

‘ரூட் தல’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி - கல்லூரி முதல்வர்களுடன் காவல்துறை ஆலோசனை
‘ரூட் தல’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி - கல்லூரி முதல்வர்களுடன் காவல்துறை ஆலோசனை

‘ரூட் தல’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்லூரி முதல்வர்களுடன் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் கத்தியால் வெட்டிக் கொண்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் 4 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளனர்.

 இது போன்ற ஆயுதங்களோடு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈடுபடும் மாணவர்கள் மீது ரவுடி பட்டியலில் சேர்க்கவும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் சென்னை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 


மாணவர்களின் மோதலை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரூட் தல பிரச்னையை தீர்க்க சென்னை (கிழக்கு) காவல்துறை இணை ஆணையர் சுதாகர் தலைமையில் கல்லூரி முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

கீழ்ப்பாக்கம் பச்சையப்பன்கல்லூரி, மெரீனா காமராஜர் சாலையில் உள்ள மாநிலக்கல்லூரி, ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரி ஆகியவற்றின் முதல்வர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள கிழக்கு சென்னை காவல்துறை மண்டல அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் காவல்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com