\
மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி

மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி

மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி
Published on

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மதுபானக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். மாற்றுத் திறனாளி ஒருவரும் பாதிக்கப்பட்டார்.

டாஸ்மாக் தொடர்பான வழக்கு ஒன்றில், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் மதுக்கடை திறக்கப்பட மாட்டாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முன்னதாக கூறியுள்ளது. ஆனால் தற்போதோ மதுபானக் கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினரே கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com