சென்னையில் மீனவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் தடியடி
சீன விசைப்படகு இன்ஜின் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசிமேட்டில் ஒருதரப்பு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
கடலில் மீன்பிடிக்கும்போது, அதிக விசைத்திறன் கொண்ட சீன இன்ஜினை ஒரு தரப்பு மீனவர்கள் பயன்படுத்துவதாகவும், இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டி சென்னை காசிமேட்டில் மற்றொரு தப்ரப்பு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதால், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். அப்போது மீனவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் காரணமாக ராயபுரம்-காசிமேடு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் படகில் இருந்து சீன எஞ்சினை அகற்றினர்.