உயிரிழந்த காவலர்
உயிரிழந்த காவலர்pt desk

மயிலாடுதுறை: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து - காவலர் உயிரிழப்பு

சீர்காழி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுநரை கைது செய்த கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (39). இவர், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். சிதம்பரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், நேற்று இரவு பணி முடிந்து சீர்காழி - சிதம்பரம் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

Police station
Police stationpt desk

அப்போது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் காவலர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொள்ளிடம் போலீசார், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த காவலர்
வேலூர்: சாலையில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்த தெருநாய்கள் - 7 பேர் படுகாயம்

இறந்த காவலர் காளிதாசுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இரவு பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com