\
கோடநாடு வழக்கு - அதிமுக பிரமுகர் சஜீவனிடம் காவல்துறையினர் விசாரணை

கோடநாடு வழக்கு - அதிமுக பிரமுகர் சஜீவனிடம் காவல்துறையினர் விசாரணை

கோடநாடு வழக்கு - அதிமுக பிரமுகர் சஜீவனிடம் காவல்துறையினர் விசாரணை
Published on

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுகவின் வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. அதிமுக வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் பதவி வகித்துவருகிறார். இவர் கோடநாடு பங்களாவின் உள் அரங்க வேலைபாடுகள் செய்து கொடுத்துவந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நள்ளிரவில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடைபெற்றது. இந்த சம்பவம் நடைபெற்ற சிலமணிநேரத்தில் கேரள எல்லையில் காரில் சென்ற இருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த இருவரை விடுவிக்க காவல்நிலையத்திற்கு சென்றவர் சுனில். சுனிலின் சகோதரரான சஜீவன்மீது தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது இவரிடம் நடத்தப்படும் விசாரணை வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com