\
சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை

சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை

சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை
Published on

சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படையினர் விசாரணை நடத்திவ ருகின்றனர். இதுவரை 30க்கும் மேற்பட்டோரின் விசாரணை நடைபெற்றுள்ளது. குறிப்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மூன்றுக்கும் மேற்பட்ட முறை விசாரணை நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறையும், கோவையில் 2 முறையும் விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த வழக்கில் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியமான நபர்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திவருகின்றனர். கோடநாடு பங்களா மேலாளரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com