ஆவடி: காதல் திருமணம் செய்த இரண்டே நாளில் சடலமாக மீட்கப்பட்ட புதுமணப் பெண்; போலீஸ் விசாரணை

ஆவடி: காதல் திருமணம் செய்த இரண்டே நாளில் சடலமாக மீட்கப்பட்ட புதுமணப் பெண்; போலீஸ் விசாரணை

ஆவடி: காதல் திருமணம் செய்த இரண்டே நாளில் சடலமாக மீட்கப்பட்ட புதுமணப் பெண்; போலீஸ் விசாரணை
Published on

திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி முத்துக்குமரன் நகரைச் சேர்ந்தவர் அனிதா (26). பட்டதாரியான இவர் பூந்தமல்லியை அடுத்த காட்டுபாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் அனிதாவுக்கு, திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அனிதா தன்னுடன் வேலைபார்க்கும் ஆவடி கோவர்த்தனகிரி அன்பு நகர் முதல் தெருவைச் சார்ந்த உதயா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் கடந்த புதன்கிழமை ராயபுரத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் அவர் உதயா வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். விசாரணைக்குப் பிறகே அனிதா இறந்ததற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர். திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com