விழுப்புரத்தில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதம் - போலீசார் விசாரணை

விழுப்புரத்தில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதம் - போலீசார் விசாரணை

விழுப்புரத்தில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதம் - போலீசார் விசாரணை
Published on

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது பெரியார் படிப்பகம். இதன் அருகில் மார்பளவு பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ சிலர் பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். பெரியார் சிலையிலிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டதுடன், முகம் மற்றும் மூக்கு அமைந்துள்ள பகுதியில் உடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை அதை கவனித்த அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட போலீசார் தற்போது அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலையை சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில் கம்பி வேலியை உடைத்து அதற்குள் இருந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com