குப்பைத்தொட்டியில் பிளாஸ்டிக் பைக்குள் கிடந்த ஆண் குழந்தையின் சடலம் - போலீஸ் விசாரணை

குப்பைத்தொட்டியில் பிளாஸ்டிக் பைக்குள் கிடந்த ஆண் குழந்தையின் சடலம் - போலீஸ் விசாரணை

குப்பைத்தொட்டியில் பிளாஸ்டிக் பைக்குள் கிடந்த ஆண் குழந்தையின் சடலம் - போலீஸ் விசாரணை
Published on

தனியார் மருத்துவமனையில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எதனால் வீசி சென்றார்கள்? யார் வீசி சென்றார்கள்? என விசாரணை நடந்துவருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் உள்ளே இருந்த குப்பைத் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசவே மருத்துவமனை ஊழியர்கள் அந்த குப்பைத் தொட்டியை சோதனை செய்துள்ளனர். இதில் அந்த குப்பைத் தொட்டியினுள் பிறந்த குழந்தையின் சடலம் பிளாஸ்டிக் பையில் போடப்பட்டு வீசப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.  இதில், பிறந்த ஆண் குழந்தையின் சடலம் தொப்புள்கொடி கூட அறுக்காமல் சிறிய பிளாஸ்டிக் பையில் வைத்து போடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வந்தவாசி போலீஸார் தனியார் மருத்துவமனையில் உள்ளவர்களிடம் யார் குழந்தையை போட்டது? அல்லது யாராவது வெளியில் இருந்து வந்து குப்பைத்தொட்டியில் போட்டுச் சென்றார்களா? என அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com