விக்கிரவாண்டி அடுத்துள்ள முண்டியம்பட்டத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக ஓபிசி பிரிவின் மாவட்டத் துணைச் செயலாளர் ஆவார். விக்கிரவாண்டியில் உள்ள ராஜஸ்ரீ தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிகிற ரவி, காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார். திரும்ப நள்ளிரவு 12 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுமார் 50 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.