உசிலம்பட்டியில் பிறந்து 18 நாட்களே ஆன பெண் சிசு உயிரிழப்பு: போலீஸ் தீவிர விசாரணை
மதுரை உசிலம்பட்டி அருகே பிறந்து 18 நாட்களே ஆன பெண் சிசு உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலாங்குளம் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ஜெயபாண்டி-பவித்ரா தம்பதிக்கு கடந்த 18-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தகவலறிந்த வாலாந்தூர் காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே மதுரை மாவட்டம் புள்ளநேரியில் பிறந்து 30 நாட்களே ஆன பெண் சிசு கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.