\
‘காவலன்’ செயலி மூலம் பெண் புகார் : 2 பேரிடம் போலீசார் விசாரணை 

‘காவலன்’ செயலி மூலம் பெண் புகார் : 2 பேரிடம் போலீசார் விசாரணை 

‘காவலன்’ செயலி மூலம் பெண் புகார் : 2 பேரிடம் போலீசார் விசாரணை 
Published on

சென்னை ஆர்.கே.நகரில் ‘காவலன்’ செயலி மூலம் பெறப்பட்ட புகாரில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கூரியர் பாய் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்த இருவர் மீது சந்தேகமடைந்த பெண், ‘காவலன்’ செயலியில் புகார் தெரிவித்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார் அங்கிருந்த சலீம், தாவுத் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், பெண்களின் பாதுகாப்புக்காக ‘காவலன்’ செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com