\
தமிழ்நாடு - புதுச்சேரி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

தமிழ்நாடு - புதுச்சேரி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

தமிழ்நாடு - புதுச்சேரி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
Published on

தமிழ்நாட்டில் இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக் கிழமையில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழக - புதுச்சேரி எல்லைகளில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று 50 சதவீதம் அதிகரித்துள்ளதால், உரிய காரணமின்றி தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எல்லையில் காவல்துறையினரின் தீவிர வாகனச் சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

உரிய காரணமின்றி தமிழகத்திற்குள் நுழைய முயலும் வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர். அதேசமயம் புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததால் தமிழகத்தில் இருந்து அங்கு செல்வோர் தடுக்கப்படுவதில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com