குப்பைகளை கையால் அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர் வீரக்குமாருக்கு கமிஷ்னர் பாராட்டு

குப்பைகளை கையால் அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர் வீரக்குமாருக்கு கமிஷ்னர் பாராட்டு

குப்பைகளை கையால் அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர் வீரக்குமாருக்கு கமிஷ்னர் பாராட்டு
Published on

சென்னை வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர் வெளியேற, குப்பைகளை கையால் அப்புறப்படுத்தி சமூக பணியாற்றிய வேப்பேரி காவல் ஆய்வாளர் வீரக்குமாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டி பரிசு வழங்கினார்.

கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சென்னை வேப்பேரியில் உள்ள ஈவேரா சாலையில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாலைகளில் இருந்த குப்பைகள் கால்வாயின் துவாரத்தில் அடைத்துக் கொண்டது. இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதனைக் கண்ட வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் வீரகுமார்‌ எந்த தயக்கமும் இன்றி, சாலையோர அடைப்பை நீக்கினார். கையுறை கூட ‌அணியாமல் களத்தில் இறங்கிய அந்தக் காவல் ஆய்வாளருக்கு சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வந்தன.

இதனிடையே தேங்கிய மழை நீர் வெளியேற, குப்பைகளை கையால் அப்புறப்படுத்தி சமூக பணியாற்றிய வேப்பேரி காவல் ஆய்வாளர் வீரக்குமாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டி பரிசு வழங்கினார்.

புதிய தலைமுறை இணையதளம் சார்பாக வீரக்குமாரை தொடர்பு கொண்ட போது, காவல்துறையினர் பணியே மக்களுக்கு சேவை செய்வதுதானே என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com