தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
Published on

தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த 32 வயது செல்வன் என்பவர் சொத்து பிரச்னையில் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

இதனால், ஹரிகிருஷ்ணன் மீதும் கொலை செய்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள அவர் இன்னும் கைது செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com