குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நூலகம் அமைத்த போலீசார்!

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நூலகம் அமைத்த போலீசார்!

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நூலகம் அமைத்த போலீசார்!
Published on

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நூலகம் அமைத்து கொடுத்துள்ளனர் தமிழ்நாடு காவல் அதிகாரிகள். காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாமல்லபுரம் மற்றும் கூவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த நூலகம்  அமைக்கப்பட்டுள்ளது.

‘இரண்டு நூலகங்களிலும் மொத்தமாக 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பெரும்பாலானவை நன்கொடையாக பெறப்பட்டவை. காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சாமுண்டேஸ்வரி, நூலகம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

கூவத்தூர் நூலகத்தில் 60 குழந்தைகளும், மாமல்லபுரத்தில் 40 குழந்தைகளும் சேர்ந்துள்ளனர். இவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாங்கிச் சென்று படித்து வருகின்றனர்.

இந்தியாவின் எதிர்காலமான இன்றைய இளம் வயது பிள்ளைகளிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். நூலகத்தின் பராமரிப்பு பணிக்காக இரண்டு பேரை பணியமர்த்த உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com