\
மணப்பாறை வங்கி லாக்கரில் துப்பாக்கிகள்: காவல்துறை ஆய்வு

மணப்பாறை வங்கி லாக்கரில் துப்பாக்கிகள்: காவல்துறை ஆய்வு

மணப்பாறை வங்கி லாக்கரில் துப்பாக்கிகள்: காவல்துறை ஆய்வு
Published on

திருச்சி மணப்பாறையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லாக்கர் அறையின் அருகே இருந்த இரண்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ளது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. அங்கு இன்று காலை பணிக்கு வந்த அதிகாரிகள் வங்கியின் லாக்கர் அறைக்கு அருகில் இருக்கும் பதிவேடுகள் வைக்கும் பகுதியில் ஒரு பையில் பிளாஸ்டிக் கவரில் இரண்டு கைத்துப்பாக்கிகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து வங்கி அதிகாரிகள் அளித்த தகவலையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி தலைமையில் காவல்துயைினர் வங்கிக்கு வந்து, அவற்றைக் கைப்பற்றி மணப்பாறை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

இதனையடுத்து நிபுணர்களை வரவழைத்து துப்பாக்கிகளின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வுக்கு பின்னரே துப்பாக்கிகள் அசலா அல்லது போலியா என்பது தெரிய வரும் என மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில், இந்த வங்கியில் ஊழியராக பணிபுரிந்த செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அதே வங்கியில் இரண்டு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com