கொரோனா வதந்தியை நிறுத்த கவுண்டமணியின் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வதந்தியை நிறுத்த கவுண்டமணியின் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வதந்தியை நிறுத்த கவுண்டமணியின் விழிப்புணர்வு வீடியோ
Published on

கொரோனா வைரஸ்‌ தொடர்பான வதந்திகளை நம்பக்கூடாது என்‌பதை உணர்த்தும் வகையில் மதுரை மாவட்ட கா‌வல்துறை விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.


கொரோனா‌ வைரஸை விட அது தொடர்பான வதந்திகள் அதிவேகமாக பரவி வருகின்றன. அப்படிதான், மதுரை திருமங்கலத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், அதனால் யாரும் திருமங்கலம் செல்ல வேண்டாம் என்றும் வதந்திகள் பரவின. ‌

வாட்ஸ் அப் குரூப்புகளிலும், ‌சமூக வலைத்தளங்களிலும் இந்த வதந்தி பரவியதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல்துறையினர் நகைச்சுவை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். செந்தில், கவுண்டமணி நடித்த காலரா குறித்த நகைச்சுவை காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ள காவல்துறை, இது போன்ற புரளிகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

வீடியோவின்‌ பக்கத்தில் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட காவல்துறையின் இந்த முயற்சிக்கு பாராட்டு கிடைத்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com