அதிமுக எம்.எல்.ஏவின் மகன் மீது வழக்குப்பதிவு 

அதிமுக எம்.எல்.ஏவின் மகன் மீது வழக்குப்பதிவு 

அதிமுக எம்.எல்.ஏவின் மகன் மீது வழக்குப்பதிவு 
Published on

ஈரோட்டில் செய்தியாளர்களை தாக்கியதாக அதிமுக எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோட்டில் மடிக்கணினி வழங்குவது குறித்த செய்தி சேகரிக்க சென்ற போது செய்தியாளர்களை தாக்கிய சட்டமன்ற உறுப்பினரின் மகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைபள்ளியில் நேற்று மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம் மற்றும் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கடந்த ஆண்டு மடிக்கணினி கிடைக்காத மாணவர்கள் தங்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என கூறி பள்ளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்த போது அவர்களை தடுத்த சட்டமன்ற உறுப்பினர் கே.வி ராமலிங்கத்தின் மகனும் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளருமான ரத்தன்பிரத்வி உள்பட கட்சியினர் சிலர் செய்தியாளர்களை தாக்கினர்.

இதில் காயமடைந்த செய்தியாளர்கள் இருவரும் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இச்சம்பவம் குறித்து செய்தியார்கள் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு காவல்நிலைய போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ரத்தன் பிரத்வி உள்பட அதிமுக வினர் 4 பேர்  மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com