கொரோனா பரவும்.. அதனால் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் இதனை செய்ய வேண்டாம் - காவல்துறை அறிவுரை

கொரோனா பரவும்.. அதனால் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் இதனை செய்ய வேண்டாம் - காவல்துறை அறிவுரை

கொரோனா பரவும்.. அதனால் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் இதனை செய்ய வேண்டாம் - காவல்துறை அறிவுரை
Published on

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை வீதிகளில் பிளாஸ்டிக் பையை வாயால் ஊதி பஞ்சுமிட்டாயை விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவார்கள்.

இந்நிலையில், ஏராளமான வியாபாரிகள் பல்வேறு விளையாட்டு பொருட்கள், ஜவுளி பொருட்களை கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். இதேபோன்று சிறுவர்கள் விரும்பி உண்ணும் பஞ்சு மிட்டாய்களையும், வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் சித்திரை வீதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சுமிட்டாய் விற்பனையின் போது பக்தர்களை கட்டாயப்படுத்தி இடையூறு செய்வதாக பக்தர்கள் புகார் எழுப்பிய நிலையிலும், கொரோனா காலகட்டத்தில் பஞ்சுமிட்டாய் அடைத்து வைக்கக் கூடிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை வாய் மூலமாக ஊதுவதால் கொரோனா தொற்று போன்ற நோய் பரவும் சூழல் உருவாகும் என்பதாலும், சித்திரை வீதிகளில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடை காவல்துறையினரால் விதிக்கப்பட்டுள்ளது.

இதனையும் மீறி சித்திரை வீதிகளில் பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு காவல்துறையினர் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பக்தர்களை தொந்தரவு படுத்தாமல் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை வாயால் ஊதி பஞ்சு மிட்டாய்களை விற்பனை செய்யக்கூடாது என அவ்வப்போது அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com