\
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை 

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை 

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை 
Published on: 

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை செய்ய தனிப்படை கேரளா விரைகிறது. 

பாத்திமாவின் தாயார், சகோதரி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. விடுமுறைக்காக கேரளா சென்றுள்ள பாத்திமா வகுப்பு தோழிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர்கள் 3 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆதாரமாக கருதப்பட்ட பாத்திமாவின் செல்போன் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் காத்திருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com