மதுரை: ஊரடங்கை மீறி வெளியேவருபவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து போலீஸார் அறிவுரை

மதுரை: ஊரடங்கை மீறி வெளியேவருபவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து போலீஸார் அறிவுரை
மதுரை: ஊரடங்கை மீறி வெளியேவருபவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து போலீஸார் அறிவுரை

மதுரையில் முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய நபர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து நூதன முறையில் போக்குவரத்து காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். 

கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 24 ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றிய நபர்களை பிடித்த போக்குவரத்து காவல்துறையினர் நூதன முறையில் ரோஜா பூ கொடுத்து வெளியே சுற்ற வேண்டாம் எனவும், கொரானா பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்து வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com