கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து சென்னை மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி அங்கு போராட்டம் நடந்து வருகிறது. வயல் வெளியில் எண்ணை குழாய் பதிப்பதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் இந்தப் போராட்டத்தில் பொதுமக்களுடன் மாணவர்களும் இணைந்துள்ளனர்.
போராட்டத்துக்கு ஆதரவாக, ஜல்லிக்கட்டுக்கு வந்த கூட்டம் போல, மெரினா கடற்கரையில் மாணவர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக, உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர். மெரீனாவில் வழக்கத்துக்கு அதிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.