கதிராமங்கலத்தில் திடீரென போலீஸ் குவிப்பு

கதிராமங்கலத்தில் திடீரென போலீஸ் குவிப்பு

கதிராமங்கலத்தில் திடீரென போலீஸ் குவிப்பு
Published on

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திடீரென குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக அந்த கிராம மக்கள் நடத்திய கடையடைப்பு போராட்டம் 11 நாட்களுக்குப் பிறகு நேற்று வாபஸ் பெறப்பட்டது. ஆனால் போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் கூறினார். இந்நிலையில், மீண்டும் போராட்டம் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. போலீசாருக்கும் - பொதுமக்களுக்கும் இடையே அண்மையில் மோதல் வெடித்த நிலையில், அங்கிருந்த போலீசார் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்படவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாகை மாவட்டம் தருமபுரம் அரசு மகளிர்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் நுழைவாயில் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கதிராமங்கலம் கிராமத்தை விட்டு, ஓ.என்.ஜி.சி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com