டாஸ்மாக் லாரியில் வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல்

டாஸ்மாக் லாரியில் வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல்
டாஸ்மாக் லாரியில் வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல்

திருவாரூரில் அரசு மதுபான கிட்டங்கிற்க்கு மதுபான பாட்டில்களை ஏற்றி வந்த லாரியிலிருந்து சக்திவாய்ந்த வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் செயல்பட்டு வரும் ஒரு மதுபான தொழிற்சாலையிலிருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு திருவாரூருக்கு சென்ற லாரியில் வெடிகுண்டு இருப்பதாக எண்ணூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரையும் அவரது உதவியாளரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் திருவாரூர் டாஸ்மாக் கிடங்கில் இருக்கும் லாரியில் வெடிகுண்டு பொருள்கள் இருப்பதாகக் கூறினர்.

இதையடுத்து எண்ணூர் காவல்துறையினர் திருவாரூர் விரைந்து லாரியில் சோதனை மேற்கொண்டு வெடிபொருள்களை கைப்பற்றினர். லாரியில் இருந்த மேலும் பல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. டாஸ்மாக் கிடங்கில் உள்ள மற்ற லாரிகள் எதிலேனும் வெடிகுண்டுகள் உள்ளனவா என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

மேலும் அதிமுக கொடி பொருத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கார் யாருடையது என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களை அந்தக் காரிலேயே எண்ணூர் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். லாரியை ஓட்டி வந்த மோகன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வெடிப்பொருளை வைத்து டாஸ்மாக் கிடங்கை தகர்க்க திட்டமிடப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com