தமிழ்நாடு
ஓவர் வேகம்: சினிமா தயாரிப்பாளரின் சொகுசு கார் பறிமுதல்!
ஓவர் வேகம்: சினிமா தயாரிப்பாளரின் சொகுசு கார் பறிமுதல்!
சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக சென்ற சொகுசு காரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் விலை உயர்ந்த லம்போர்கினி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அதை திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீசார் பிடித்து காரை ஓட்டி வந்த ரமேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அது, சினிமா பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண் மணியனின் கார் என்றும் காரின் மதிப்பு ஐந்தே முக்கால் கோடி ரூபாய் என்றும் தெரியவந்தது. பின்னர் அந்த சொகுசு காரை திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து அதிவேகமாக காரை ஓட்டியதற்கு 1200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.