\
சமூக இடைவெளி இன்றி உணவு வழங்கல் ? : திமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு

சமூக இடைவெளி இன்றி உணவு வழங்கல் ? : திமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு

சமூக இடைவெளி இன்றி உணவு வழங்கல் ? : திமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு
Published on

சேலத்தில் சமூக இடைவெளி இன்றி மதிய உணவு வழங்கியதாக திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இன்று திமுக சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது ஆத்தூர் நகரக் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com