ப்ளூவேல்-லிருந்து தப்பிப்பது எப்படி? காவல்துறை விளக்கம்

ப்ளூவேல்-லிருந்து தப்பிப்பது எப்படி? காவல்துறை விளக்கம்
ப்ளூவேல்-லிருந்து தப்பிப்பது எப்படி? காவல்துறை விளக்கம்

ப்ளூவேல் விளையாடும் பிள்ளைகளைக் கண்டறிவதற்கும், அவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதற்குமான வழிமுறைகளை பெற்றோருக்கு தமிழ்நாடு காவல்துறை விளக்கியுள்ளது.

ப்ளூவேல் விளையாட்டு என்ற பெயரிலும், ப்ளூவே‌ல் சேலஞ்ச் என்ற பெயரிலும் விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டு, மிக ஆபத்தானது என்றும், 50 நாள்கள் தொடர் விளையாட்டின் இறுதி சவாலாக தற்கொலை செய்து கொள்வது நிகழ்கிறது. இந்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள், பிறரிடமிருந்து விலகியும், சோகமாகவும் காணப்படுவார்கள். பிறர் மீது திடீரென்ற வெறுப்பும், கோபமும் வெளிப்படுத்துவார்கள். இணையதளத்தில் அதிக நேரம் செலவிடுவதும், இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதும், வழக்கத்துக்கு மாறாக உடலில் காயங்களும் இருந்தால், பெற்றோர் உடனடியாக குழந்தைகளின் சமூக வலைதள செயல்பாட்டைக் கண்காணிக்க வேண்டும். 

மேலும், அவர்களால் கையாளக்கூடிய விளையாட்டுகளை மட்டுமே விளையாடுமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்துவதோடு, செல்போனில் உள்ள குறுந்தகவல்கள், அழைப்புகள், இதுவரை அவர்கள் சென்ற பக்கங்களின் தரவுகள் ஆகியவற்றையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அதோடு, குழந்தைகளோடு பெற்றோர் அதிக நேரம் செலவிட்டு, மைதானங்களில் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com