சிலை கடத்தலில் தொடர்புள்ள போலீஸ் டிஎஸ்பி தலைமறைவு

சிலை கடத்தலில் தொடர்புள்ள போலீஸ் டிஎஸ்பி தலைமறைவு

சிலை கடத்தலில் தொடர்புள்ள போலீஸ் டிஎஸ்பி தலைமறைவு
Published on

தாய்லாந்துக்கு ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான 3 சிலைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த போலீஸ் டிஎஸ்பி தலைமறைவாகியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஞானஅன்பு விவசாய நிலத்தில் இருந்து கடந்த 2008 ஆம் ஆண்டு 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதனை அறிந்து அப்போது அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த காதர் பாட்ஷா, தலைமைக் காவலராக இருந்த சுப்புராஜ் மற்றும் காவலர் ஒருவர் சேர்ந்து விவசாயி ஞானஅன்பை துப்பாக்கியை காட்டி மிரட்டி 3 சாமி சிலைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். பின்னர் அந்த சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் 15 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டனர். தீனதயாளன் சிலைகளை டெல்லி புரோக்கர் மூலமாக விற்று தாய்லாந்து நாட்டிற்கு கடத்தி விட்டார். தற்போது சிலையின் மதிப்பு 9 கோடி ரூபாய். இது குறித்து 9 ஆண்டுகளாக எந்த ஒரு வழக்கும் பதியப்படவில்லை. தீனதயாளனின் வாக்குமூலத்தை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாமி சிலைகள் கொள்ளையடித்த வழக்கில் சிக்கியுள்ள சுப்புராஜ் தற்போது கோயம்பேடு காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார். அவரைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதர் பாட்ஷா தற்போது போலீஸ் டிஎஸ்பியாக உள்ளார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் தன்னை தேடும் தகவலறிந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com