அதிவேகமாக மோதிய மாணவனின் கார்: விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர்

அதிவேகமாக மோதிய மாணவனின் கார்: விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர்

அதிவேகமாக மோதிய மாணவனின் கார்: விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர்
Published on

கல்லூரி மாணவனின் கார் மோதியதில் தலைமைக் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சேலையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் ரமேஷ்(45) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி திரும்புவதற்காக காத்திருந்தார். 

அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று சிக்னலில் நின்று கொண்டிருந்த தலைமைக்காவலர் வாகனத்தின் மீது பின்னால் மோதியது. அதிகவேகமாக கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் ஆதித்யா(23) என்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com