சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி அதிரடிப்படையினர் குவிப்பு
சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக 200 அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளியைத் தொடர்ந்து சபாநாயகர் இருக்கையை சூழ்ந்துகொண்ட திமுக உறுப்பினர்கள், மைக் மற்றும் இருக்கையை சேதப்படுத்தியதால், அவை பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதையடுத்து அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தலைமைச் செயலகத்தை நோக்கி செல்லும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவை வளாகத்தைச் சுற்றிலும் அதிரப்படையைச் சேர்ந்த 200 போலீசார் குவிக்கப்பட்டனர். கூடுதலாக ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.