\
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- காவல்துறை எச்சரிக்கை

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- காவல்துறை எச்சரிக்கை

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- காவல்துறை எச்சரிக்கை
Published on

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

“நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்களை சிலர் பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரப்புவோர் யார் என்பதை சைபர் க்ரைம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்” என காவல்துறை எச்சரித்துள்ளது.

முன்னதாக விமானப்படை தரப்பிலிருந்து, “இறந்தவர்களின் கன்னியம் காக்க, விபத்து தொடர்பான யூகங்கள் பரப்புவதை அனைவரும் தவிர்க்கவும். விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் உண்மை வெளிவரும்” என்று கூறப்பட்டிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com