போத்ராவிற்கு போலீஸ் காவல்

போத்ராவிற்கு போலீஸ் காவல்

போத்ராவிற்கு போலீஸ் காவல்
Published on

கந்துவட்டிப் புகாரில் சிக்கிய சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது இரண்டு மகன்களை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

போத்ராவையும் அவரது மகன்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி குற்றப்பிரிவு காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசரித்த எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் போத்ராவையும் அவரது இரு மகன்களையும் ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது. கந்துவட்டி புகாரில் போத்ராவும், அவரது இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், போத்ரா குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com