காவலர் தற்கொலை: தோட்டாவை தேடும் காவல்துறை

காவலர் தற்கொலை: தோட்டாவை தேடும் காவல்துறை
காவலர் தற்கொலை: தோட்டாவை தேடும் காவல்துறை

ஜெயலலிதாவின்  நினைவிடத்தில் தற்கொலை செய்த காவலரின் உடலிலிருந்து வெளியேறிய தோட்டாவை  தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரீனாவில் உள்ளது. இங்கு போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று காலை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய போலீஸ்காரர் அருண்ராஜ் பாதுகாப்பு பணியில் இருந்தார். திடீரென தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக் கண்டவர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.

தற்கொலை செய்த காவலரின் உடலிலிருந்து வெளியேறிய தோட்டாவை காணவில்லை.அருணின் உடலில் இருந்து வெளியேறிய தோட்டாவை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com