\
'சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகின்றன' - சென்னை காவல் ஆணையர்

'சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகின்றன' - சென்னை காவல் ஆணையர்

'சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகின்றன' - சென்னை காவல் ஆணையர்
Published on

பிரதமர் மோடி வருகையையொட்டி என்ன மாதிரியான செயல்பாடு, வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து நடவடிக்கை எடுப்போம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முழுக்க கண்காணிக்கப்படுகிறது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள சர்வதேச செஸ் போட்டி நடைபெற இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மெய்யநாதன், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், ‘’பிரதமர் வருகையை ஒட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. இன்று முதல் தீவிர வாகன சோதனை நடைபெறும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை மாநகரில் ஹீலியம் பலூன்கள், ட்ரோன்கள் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்ன மாதிரியான செயல்பாடு, வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து நடவடிக்கை எடுப்போம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முழுக்க கண்காணிக்கப்படுகிறது என்றார் அவர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com