நூலிழையில் தப்பிய காவல் ஆணையர்
நூலிழையில் தப்பிய காவல் ஆணையர்pt desk

திருவள்ளூர் | அப்பளம் போல் நொறுங்கிய கார்.. நூலிழையில் தப்பிய காவல் ஆணையர் - வீடியோ!

சாலையில் நின்ற காவல் ஆணையரின் கார் மீது அதிவேகத்தில் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காருக்குளேயே சிக்கித் தவித்த காவல் ஆணையரின் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Published on

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கியது. பொன்னேரியில் ஆய்வுப் பணியை முடித்து விட்டு திரும்பிய போது போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த காவல் ஆணையரின் கார் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காவல் ஆணையரின் பாதுகாவலர் மாரி செல்வம் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், காவல் ஆணையர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரின் கதவுகளை திறக்க முடியாததால் காவல் ஆணையர் காருக்குள்ளேயே சிக்கியிருந்தார்.

நூலிழையில் தப்பிய காவல் ஆணையர்
உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசிற்கு நீதிமன்றம் கண்டனம்

இதையடுத்து உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சக காவலர்கள் சேர்ந்து காரின் கண்ணாடியை உடைத்து காவல் ஆணையரை காரிலிருந்து மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கார் விபத்துக்குள்ளான காட்சிள். காரில் இருந்து காவல் ஆணையரை மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com