நெல்லை : மேலப்பாளையம் ஊரின் அனைத்து வாயில்களும் அடைப்பு

நெல்லை : மேலப்பாளையம் ஊரின் அனைத்து வாயில்களும் அடைப்பு

நெல்லை : மேலப்பாளையம் ஊரின் அனைத்து வாயில்களும் அடைப்பு
Published on

நெல்லை மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள மேலப்பாளையம் ஊரின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில், தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதார துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் 1131 பேர் கலந்து கொண்டனர். அதில் 515 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 616 பேர் தாமாக முன்வந்து மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று தெரிவித்திருந்தார். நேற்றுவரை 124 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், டெல்லி சென்ற நபர்களை அழைத்து சென்று சோதனை செய்ததில் அவர்களில் நேற்று ஒருநாளில் மட்டும் நெல்லையில் 22 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லையில் ஏற்கெனவே ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நெல்லை மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில் ஒன்றான மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக பாதுகாப்பு வட்டத்துக்குள் வந்துள்ளது. வெளியாட்கள் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து மக்கள் யாரும் வெளியே வரவும் அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com