\
கத்தியால் குத்தப்பட்டும் திருடனை விரட்டிப் பிடிக்க முயற்சித்த காவலர் !

கத்தியால் குத்தப்பட்டும் திருடனை விரட்டிப் பிடிக்க முயற்சித்த காவலர் !

கத்தியால் குத்தப்பட்டும் திருடனை விரட்டிப் பிடிக்க முயற்சித்த காவலர் !
Published on

பழனியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்த போது கத்தியால் தாக்கப்பட்ட கோவை பேரூர் உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினாரரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்த்து நலம் விசாரித்து, அவரது பணியை வெகுவாக பாராட்டினார். 

பழனியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்த போது கத்தியால் தாக்கப்பட்ட கோவை பேரூர் உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவை மதுக்கரை கே.ஜி.காலனி  பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான விக்னேஷ் மற்றும் ஆசிக் அகமது ஆகிய இருவரும் பழனி அருகே இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பேரூர் காவல்நிலைய ஆய்வாளர் தங்கபாண்டி தலைமையில் காவலர்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது குற்றவாளிகள் தப்பிக்க முயற்சி செய்து கையில் இருந்த கத்தியால் காவலர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பேரூர் உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினாருக்கு கழுத்து பகுதியில் பலத்த வெட்டுப்பட்டது. தாக்கி விட்டு குற்றவாளிகள் தப்பிய போது, தனது காயத்தையும் பொருட்படுத்தாது ஆறுமுக நயினார் அவர்களை விரட்டினார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது.

இதனையடுத்து பழனியில் முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர் , கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காவலர்களை கத்தியால் தாக்கிய விக்னேஷ் மற்றும் ஆசிக் அகமது ஆகிய இருவரையும் சிறையில் அடைப்பதற்கான பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி நேரில் பார்த்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் சிக்சிஹை குறித்து கேட்டறிந்தவர், அவருடைய செயலை வெகுவாக பாராட்டினார். விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com